சென்னை மீஞ்சூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் சோதனை முயற்சியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மீஞ்சூரில் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் சோதனை முயற்சியை துணை முதல்வர் முகஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில்,
'ஜூலை முதல் வாரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். ஜூலை மாத கடைசி வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்' என்றார்.
மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னை மக்களுக்கு தினசரி 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
From: sivajitv.com
Date: June 02, 2010
No comments:
Post a Comment