கடல்நீரை குடிநீராக சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு வழங்கும் ஆலையை முதல்வர் கருணாநிதி நேற்று மீஞ்சூரில் தொடங்கி வைத்தார்.
ஸீ600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஆலையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு கூடுதலாக இன்று முதல் வழங்கப்படுகிறது.
புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய நீர் தேக்கங்கள் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ளன. இது தவிர, வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பருவமழை பொய்த்துவிடும் நேரங்களில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையில் பற்றாக்குறை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தெற்காசியாவிலேயே முதல் முறையாக கடல் நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் ஸீ600 கோடியில் இந்த திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2007ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டப்பணியை மேற்கொண்ட ஐவிஆர்சிஎல் கட்டுமான நிறுவனமும், ஸ்பெயின் நாட்டின் பெபீசா அக்வா நிறுவனமும் இணைந்து 60 ஏக்கர் பரப்பளவில் ஆலையை உருவாக்கின. சோதனை முறையில் கடல்நீரை, குடிநீராக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. வெற்றிகரமாக சோதனைகளும், ஆய்வுகளும் முடிந்து, கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் முழுமை பெற்றது.
இதையடுத்து, இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மாலை மீஞ்சூரில் கோலாகலமாக நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், நீரேற்றும் மையங்கள், குடிநீர் குழாய் கட்டமைப்பு வசதிகள் அ¬னைத்தையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சென்னை பெருநகர குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, மேயர் சுப்பிரமணியன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு கூடுதலாக விநியோகிக்கப்படும். 20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment